நாட்டிற்கு வரும் இந்தியாவின் மேலுமொரு உதவித்திட்டம்

இந்தியாவில் இருந்து கடன் அடிப்படையில் பெறப்படும் 40,000 மெட்ரிக் தொன் உரம் நாளை, ஜூலை 09 ஆம் திகதி இலங்கைக்கு எடுத்துவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து, அடுத்த இரண்டு நாட்களுக்குள் 25,000 மெட்ரிக் தொன் உரம் கொழும்பிற்கு எடுத்து வரப்படவுள்ளது.

இந்தநிலையில் உர விநியோகம் ஜூலை 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி பெருப்போகத்துக்கு தேவையான உர இருப்புக்களை விநியோகிப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.