கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டமானது இன்று காலை முதல் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்திய மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு நேற்றைய தினம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.