கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்படும் கப்பல்கள்!

கொழும்பு துறைமுகத்தில் இருந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான இரு கப்பல்களில், இனந்தெரியாத குழுவொன்று பயணமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடற்படைக்கு சொந்தமான சித்துரலு மற்றும் கஜபாகு என்ற இரு கப்பல்களில், சில குழுவினர், பொருட்களுடன் செல்லும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.

துறைமுகத்தில் பணிபுரியும் ஒருவரால் பதிவுசெய்யப்பட்ட இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

ஆனால், பயணப்பொதிகளுடன் பயணம் செய்யும் இவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் தெளிவாக கிடைக்கவில்லை.