ரணில் வீடு தீக்கிரையாக்கப்பட்டது நியாயமல்ல -அங்கஜன்

பிரதமர் ரணி்ல் விக்கிரமசிங்க அவரின் தனிப்பட்ட வீடு தீக்கிரையக்கப்பட்டது் நியாயப்படுத்த முடியாதது என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் பிரதமர் ரணி்ல் விக்கிரமசிங்க அவர்களின் அரசியல் நிலை தவறானதாக இருந்தாலும் அவரின் தனிப்பட்ட வீடு தீக்கிரையாக்கப்பட்டது் நியாயப்படுத்த முடியாதது.

அவர் கற்ற கொழும்பின் பிரபல கல்லூரிக்கு உடமையாக செல்லவிருந்த, பெருந்திரளான புத்தகங்களை கொண்ட ஓர் அறிவுசார் உடமை தீக்கிரையாக்கப்பட்டது மாபெரும் தவறாகும். அமைதிவழி நியாயமான போராட்டங்கள், எக்காரணத்தைக் கொண்டும் வன்முறை வழியில் செல்லக்கூடாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தனியார் உடமைகளுக்கும் பொது உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கும் தீய சக்திகளிலிருந்து மக்கள் போராட்டத்தை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.