நாட்டில் இராணுவ ஆட்சி ஏற்படுமா?

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக நேற்றையதினம் கொழும்பில் பல சிவில் அமைப்புக்கள் இணைந்து மேற்கொண்ட போராட்டத்தில் ஜனாதிபதி செயலகம் ஆர்ப்பாட்டகாரர்களால் கைப்பற்றப்பட்டது.

அதனையடுத்து பல்வேறு அரசியல் திருப்பங்கள் இடம்பெற்றதுடன் அமைச்சர்களான ஹரிண் மற்றும் மனுச நாணயகார பந்துல குணவர்த்தன, மஹிந்த அமரவீர ஆகியோர் தமது அமைச்சு பதவியை இராஜினாமா செய்தனர்.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச எதிர்வரும் 13ம் திகதி பதவி விலகவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

அதேவேளை கோட்டபாய ராஜபக்சவின் ஆதரவாளர்களால் நாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடாத்தி அதன் மூலம் நாட்டில் அவசர நிலையினை உருவாக்கி நாட்டை இராணுவத்தின் கீழ் கொண்டுவருவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு வாகனங்களில் வந்து இறங்கிய இராணுவத்தினர் ஜனாதிபதி மாளிகையின் உள்ளே சென்றுள்ள நிலையில் அங்கு தங்கியுள்ள போராட்டக்கார்ர்களை இராணுவத்தினர் வெளியேற்ற முற்படலாம். போராட்டக்காரா்கள் வெளியேற மறுத்தால் ஏதும் குழப்பங்கள் இடம்பெறவும் வாய்ப்புள்ளதாகவும் கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.