கனடாவில் கோடைகால கொண்டாட்டங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் மீண்டும் ஓர் கோவிட் பெருந்தொற்று அலை ஏற்படக்கூடிய அபாயம் உருவாகி உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவிட் பெருந்தொற்று தொடர்பில் அவதானமாக நடந்து கொள்ள தவறினால் மீண்டும் பாரிய பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களை மக்கள் தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டியது மிகவும் அத்தியாவசியமானது என மொன்றியலை மையமாகக் கொண்ட மருத்துவ நிபுணர் டாக்டர் கிறிஸ்டபர் லாபஸ் எச்சரித்துள்ளார்.
புதிய கோவில் தெரிவுகள் காரணமாக இந்த ஆபத்து உருவாகியுள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அமுக்கிரான் திருப்பின் உப திருவுளினால் நோய் தொற்று பரவுகைக்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தடுப்பூசி எடுத்து ஏற்றிக்கொண்ட காலத்தின் அடிப்படையில் நபர்களுக்கு இந்த நோய் தொற்று தாக்கத்தின் வீரியம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் அனேகமான மாகாணங்களில் கோவிட் தொடர்பான சுகாதார கட்டுப்பாடுகள் குறிப்பாக முக கவச அணிதல் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள பின்னணியில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக உள்ளக அரங்கங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்கும் போது முக கவசம் அணியாதிருப்பது ஆபத்தானது என அவர் எச்சரித்துள்ளார்