பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் இன்று (12) நள்ளிரவு 12.00 மணி முதல் பிரமுகர் அனுமதி நடவடிக்கைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.
அரசியல் பிரமுகர்கள் விமான நிலையத்தின் பிரமுகர் முனையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மத்தள விமானநிலையத்தின் அதிகாரிகளின் தீர்மானம்
இதேவேளை, மத்தள சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு அதிகாரிகளும் தமது பணிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.
இதன்படி மத்தள சர்வதேச விமான நிலையத்தின் விஐபி டெர்மினலில் விஐபி அனுமதி வழங்கப்படமாட்டாது என குடிவரவு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக வெளியான தகவலையடுத்து, விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.