காபித் தூளில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் கண்களுக்குக் கீழ் பாதிக்கப்பட்ட பகுதியைச் சரி செய்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. பாதாம் எண்ணெய் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைத்து சருமத்தை மென்மையாக வைக்கிறது. ஆமணக்கு எண்ணெய் கண்களின் கீழ் உள்ள வீக்கத்தைக் குறைத்து இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது.
தேவையான பொருட்கள்
காபி தூள் – 1/4 கப்,
இனிப்பு பாதாம் எண்ணெய் – 1/2 கப்,
ஆமணக்கு எண்ணெய் – 2 தேக்கரண்டியளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
முதலில் காபித்தூள் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்துக் கலக்குங்கள்.
இந்த கலவையை 5-7 நாட்களுக்கு மூடி வையுங்கள். பின்னர் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கி பாட்டிலில் ஊற்றி வைத்து தேவையான போது எடுத்து கண்களுக்குக் கீழ் தடவி மசாஜ் செய்யுங்கள். நீங்கள் தூங்குவதற்கு முன் உங்கள் கண் கீழ்ப் பகுதியில் கலவையை மெதுவாக மசாஜ் செய்து விட்டு படுக்கைக்குச் செல்லுங்கள். அடுத்த நாள் காலையில் எழுந்து முகத்தினை கழுவுங்கள். இந்த முறையை நீங்கள் தினமும் பின்பற்றலாம்.