முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம், பயணக்கட்டணம் தொடர்பான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, இரண்டாவது கிலோமீற்றருக்கு அறவிடப்படும் கட்டணம், 100 ரூபாவிலிருந்து 90 ரூபாவாக குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.
அதேசமயம் , முதலாவது கிலோமீற்றருக்காக தற்போது அறவிடப்படும், 100 ரூபா கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லையென அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை பஸ் கட்டணங்களும் குறைக்கப்படுவதாக குறைக்கப்படுமென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.