அதிகரிக்கபோகும் வெளிநாட்டு தபால் சேவை கட்டணங்கள்!

வெளிநாட்டு தபால்களுக்கான சேவை கட்டணத்தை ஆகஸ்ட் 1 முதல் அதிகரிக்க உள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தோடு நான்கு நாடுகளின் தபால் பொருட்கள் மீதான கட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் அமெரிக்கா, நெதர்லாந்து, இஸ்ரேல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு தபால் பொருட்களை ஏற்று கொள்வது இடை நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியவர்தன தெரிவித்துள்ளார்.