கொரொனோ நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களில் நாளாந்தம் சுமார் 10 நோயாளர்கள் பதிவாகிய நிலையில், தற்போது நாளாந்தம் 25 கொரோனா நோயாளர்கள் பதிவாகி வருவதோடு இலங்கையில் நேற்று கொரோனா தோற்றாளர்கள் 62 ஆக பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு இலங்கைக்குள் நுழையும் அபாயம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனாவின் புதிய மாறுபாடு நாட்டிற்குள் நுழைந்ததா என்பதை கண்டறிய வேண்டும் என அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.