ஜனாதிபதியின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த விடயத்தை ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்த நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமன் ஏக்கநாயக்க இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.