பார்த்தீபனின் இரவின் நிழல் வசூல் நிலவரம்

வித்தியாசமாக எதையாவது முயற்சி செய்ய வேண்டும் என அதற்காக உழைப்பவர் நடிகர் பார்த்திபன். மற்ற இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து நடிக்கும் பார்த்திபன் படங்கள் இயக்கும் வேலைகளையும் பார்த்து வருகிறார்.

அப்படி அண்மையில் அவரே கதை எழுதி, இயக்கி, நடித்துள்ள திரைப்படம் இரவின் நிழல்.

நல்ல விமர்சனங்கள் வந்தாலும் சில பிரச்சனைகள் எழுந்த வண்ணம் உள்ளன. பார்த்திபனும் சர்ச்சை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த வண்ணம் உள்ளார்.

படத்தின் பாக்ஸ் ஆபிஸ்

ரூ. 20 கோடி பட்ஜெட்டில் தயாராகி கடந்த ஜுலை 15ம் தேதி வெளியான இந்த திரைப்படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படம் ரூ. 5 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.