காற்றுக்கென்ன வேலி விஜய் தொலைக்காட்சியில் இளைஞர்களால் கொண்டாடப்படும் ஒரு தொடர்.
இதில் கல்லூரியில் நாயகியின் நண்பனாக நடித்தார். அதேபோல் கனா காணும் காலங்கள் என்ற ஹிட் தொடரில் புலி என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
தற்போது காற்றுக்கென்ன வேலி தொடரில் இருந்தும் வெளியேறிவிட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன் கையில் Drips போட்டிருக்கும் புகைப்படம் வெளியிட்டு காதல் தோல்லி என பதிவு செய்தார். அவரது பதிவு மிகவும் வைரலாக காதல் தோல்வி நடிகர் தற்கொலை முயற்சி என செய்திகள் பரபரப்பாக வந்தன.
இந்த நிலையில் ராகவேந்திரா புலி மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நான் ஏன் தற்கொலை செய்ய வேண்டும் எனக்கு அம்மா-அப்பா இருக்கிறார்கள், அவர்களை பார்க்க வேண்டும்.
நிறைய பேட்டிகள் சில மாதங்களுக்கு முன் கொடுத்ததால் நான் பிரச்சனையில் உள்ளேன், இது வேறயா என பதிவு செய்துள்ளார்.