அருண்விஜய்க்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்த யானை

அருண் விஜய் தமிழ் சினிமாவில் பிரபலத்தின் வாரிசு என்ற அடையாளத்தோடு நடிக்க வந்தவர். ஆரம்பத்தில் இருந்து அவர் படங்கள் நடித்து வந்தாலும் சரியான ரீச் கிடைக்கவில்லை.

அவரது திரைப்பயணத்தில் பெயர் சொல்லும் படமாக முதலில் அமைந்தது அஜித்துடன் அவர் நடித்த என்னை அறிந்தால் படம் தான். அப்படத்தால் அருண் விஜய்க்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்த அதைக்கண்டு பொது இடத்திலேயே கண் கலங்கினார் அருண் விஜய்.

தற்போது அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்கள் மக்களிடம் நல்ல அங்கீகாரத்தை பெற்று வருகிறது.

யானை பட வசூல்

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த யானை திரைப்படம் கடந்த மாதமே வெளியாக வேண்டியது. ஆனால் கமலின் விக்ரம் படம் நன்றாக ஓடட்டும் என இவர்கள் படத்தை ஜுலை 1ம் தேதி ரிலீஸ் செய்தார்கள்.

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் யானை திரைப்படம் மொத்தமாக ரூ. 25 கோடி வரை வசூலித்துள்ளதாம்.