நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு பிரபலம். இவர் சந்தித்த பிரச்சனை போல் மற்ற நடிகர் எதிர்க்கொண்டால் இவ்வளவு ஆதரவை ரசிகர்களால் பெறுவார்களா என்றால் சந்தேகம் தான்.
சிம்புவின் கடினமான நேரத்தில் அவரது ஆதரவாக ரசிகர்கள் இருந்துள்ளார்கள்.
இப்போது அவர் உடல் எடை எல்லாம் குறைத்து சுறுசுறுப்பாக படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார். இடையில் சிம்புவின் அப்பாவும், இயக்குனர் நடிகருமான டி.ராஜேந்தர் அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட சிகிச்சைக்காக வெளிநாடு சென்றார்.
ராஜேந்தர் கொடுத்த பேட்டி
வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுவந்த ராஜேந்தர் அவர்கள் இன்று அதிகாலை சென்னை வந்துள்ளார். அவர் விமான நிலையத்தில் பேட்டி கொடுத்துள்ளார், அப்போது சிம்பு திருமணம் குறித்து பேசியுள்ளார்.
சிம்புவின் நல்ல மனதிற்கு நல்ல பெண் கிடைப்பார், திருமணம் எல்லாம் கடவுள் நினைக்க வேண்டும் என அவரது ஸ்டைலில் பேசியுள்ளார்.