நாட்டில் இடம்பெற்ற வன்முறை குறித்து கருத்து வெளியிட்டுள்ள மனோகணேசன்

காலிமுகத்திடல் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

மனோ வெளியிட்ட குறித்த பதிவில்,

போராட்டம் நடத்த விஹாரமகாதேவி பூங்காவை போராளிகளுக்கு தருவதாக காலையில் கட்சி தலைவர்களிடம் ஜனாதிபதி சொன்னார்.

அந்த யோசனையை போராளிகளுக்கு கூறி, அமைதியாக இடமாற்றம் செய்ய, ஏன் முயற்சிக்கவில்லை? என்ன இருந்தாலும், அவர்கள் கோட்டாவை விரட்டியதால்தான் இன்று,ரணில் ஜனாதிபதி..!என பதிவிட்டுள்ளார்.