இன்றைய நாணய மாற்று வீதம் தொடர்பான தகவலை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக 0.28 சதத்தினால் குறைவடைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 368.63, கொள்வனவு விலை 357.94 ரூபாவாகும். இதனிடையே பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபா சற்று ஏற்ற இறக்கம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.