நாட்டில் அதிகரித்த பண வீக்கத்தால் மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள ஆபத்து!

இலங்கையில் பணவீக்கம் காரணமாக உணவு திருட்டு சம்பவங்கள் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தோட்டங்களில் பழங்கள் மற்றும் மரக்கறிகள் திருடும் சம்பவங்கள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகரிக்கும் திருட்டுச் சம்பவங்கள்

நாட்டின் பல்வேறு சுப்பர் மார்க்கெட்கள் உட்பட பல்வேறு வர்த்தக நிலையங்களில் இருந்து ஆயிரக்கணக்கான உணவுப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடைகளில் உணவு பொருட்கள் திருடப்படுவது அதிகரித்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சமைத்த உணவுப் பொருட்கள் திருடப்பட்ட பல சம்பவங்கள் அண்மைய நாட்களில் பதிவாகியுள்ளன.

உணவுக்காக போராடும் மக்கள்

நாட்டில் பணவீக்கம் வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உணவுக்காக போராடும் மக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

மூன்று வேளைக்கு பதிலாக ஒரு வேளை அல்லது அதிகபட்சம் இரண்டு வேளை உண்ணும் குடும்பங்களின் எண்ணிக்கை பத்து இலட்சமாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.