விஜய் – அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக ரசிகர்கள் தற்போது கொண்டாடப்பட்டு வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் நடிகர் அஜித். இதில் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதேபோல் அஜித் எச். வினோத் இயக்கத்தில் தனது AK 61 படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த இரு திரைப்படங்களும், அடுத்த வருடம் வெளியாகவுள்ளது.
விஜய் தவறவிட்ட படத்தில் நடித்த அஜித்
நடிகர் அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகமுக்கியமான வெற்றி படங்களில் ஒன்று காதல் கோட்டை. அகத்தியன் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் சூப்பர்ஹிட்.
இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது தளபதி விஜய் தானாம். ஆனால், அப்போது விஜய்யின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால், இப்படத்தில் அஜித் கமிட்டானதாக தகவல் வெளியாகியுள்ளது.