இயக்குனர் முருகதாஸின் அடுத்த பிரம்மாண்ட திரைப்படம்

முருகதாஸின் அடுத்த பிரம்மாண்ட திரைப்படம்
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் சினிமாவின் டாப் இயக்குநராக திகழ்ந்து வருபவர், முன்னணி நடிகர்களுக்கு இவர் இயக்கிய திரைப்படம் தான் அவரின் திரைபயணத்தில் முக்கிய திரைப்படங்களாக அமைந்துள்ளன.

ஆனால் அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான சர்கார், தர்பார் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வெற்றியடைய தவறியது. இதனால் அவரின் திரைப்படங்களின் மேல் ரசிகர்கள் உண்டான ஆர்வம் குறைந்தது.

மேலும் தர்பார் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் 65-வது திரைப்படமாக உருவாகவிருந்த படத்தை இவர் தான் இயக்கவிருந்தார். ஆனால் அந்த வாய்ப்பும் இயக்குநர் நெல்சனுக்கு போனது.

இந்நிலையில் முருகதாஸின் அடுத்த திரைப்படம் குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வந்தன. இதற்கிடையே அவரின் அடுத்த திரைப்படம் குறித்த உறுதியான தகவல் கிடைத்துள்ளது.

ஆம், அவர் அடுத்து மீண்டும் பாலிவுட் திரைப்படத்தை இயக்க இருக்கிறாராம். அப்படத்தில் ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் அமீர் கானும் அப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய்யின் திரைப்பட வாய்ப்பு கைநழுவிய நிலையில் மூன்று 3 கான் இணையும் திரைப்படத்தை சென்றுவிட்டார் முருகதாஸ்.