தொகுப்பாளினி திவ்யதர்ஷினி
விஜய் தொலைக்காட்சியில் மூத்த தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் இவரை கொண்டு சேர்த்த ஒரே நிகழ்ச்சி காஃபி வித் டிடி.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல ஸ்பீட் கெட் செட் கோ, அன்புடன் டிடி என சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
மேலும், தற்போது சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள காபி வித் காதல் எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே போல் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோஷ்வா இமைபோல் காக்க படத்திலும் நடித்துள்ளார்.
அழகிய புகைப்படம்
திவ்யதர்ஷினியின் அக்கா பிரியதர்ஷினியும் தொகுப்பாளினி என்பதை நாம் அறிவோம். இந்நிலையில், திவ்யதர்ஷினி தனது தாய்யுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..