இலங்கையும் குரங்கு அம்மை குறித்த மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டு மக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் முறையான வேலைத்திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை உலக சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு நேற்று (23-07-2022) இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இதனை அறிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, உலகில் 75 நாடுகளில் 16,000க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.