அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்களை அளித்த ரஷ்யா

உக்ரைன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஏராளமான ஹிமார்ஸ் ராக்கெட் லாஞ்சர்கள் அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டொனெட்ஸ்க், செர்னிகோவ் உள்ளிட்ட பகுதியில் ரஷ்யா தாக்குதல் நடத்திய நிலையில், உக்லெகோர்ஸ்க் மின் நிலையத்தைக் கட்டுப்படுத்தும் ரஷ்யாவின் முயற்சி தோல்வியடைந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இதனிடையே குளிர்காலத்திற்கு முன்னர் ரஷ்யாவுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் தேவை என உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் தலைவர் ஆண்ட்ரி யெர்மக் (Andrei Yermak)தெரிவித்துள்ளார்.