பாக்கியாவை வீட்டிற்கு அழைத்து செல்லவரும் கோபி வெளியாகிய அதிரடியான ப்ரமோ

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், அவரை அழைப்பதற்கு கோபி சென்றுள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ளதாக எடுக்கப்பட்டுள்ளது.

பாக்கியாவிற்கு கோபி செய்யும் துரோகத்தால் ரசிகர்கள் அவரைத் திட்டித்தீர்த்து வந்த நிலையில், தற்போது குடும்பத்தில் அனைவருக்கும் உண்மை தெரியவரவே பெரும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

பாக்கியாவை அழைக்கும் கோபி
இந்நிலையில் பாக்கியாவை நினைத்து இனியா மிகவும் கஷ்டப்பட்டு வரும் நிலையில், பாக்கியாவை அழைப்பதற்கு அவர் இருக்கும் இடத்திற்கு வருகின்றார்.

அப்பொழுது பாக்கியா கோபியிடம் சத்தியம் வாங்கவே கோபி ராதிகா நினைப்பில் இருந்துகொண்டு சத்தியம் செய்து பாக்கியாவிடம் மீண்டும் வசமாக மாட்டிக்கொள்கிறார்.

இதன் பின்பு என்ன நடக்கவுள்ளது என்ற ஆவல் ரசிகர்களிடையே அதிகமாக இருந்து வருகின்றது.