நாட்டில் கோவிட் தொற்று தினசரி அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிவது தொடர்பான புதிய பரிந்துரைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
உட்புற இடங்களிலும், பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களிலும் ஒன்றுகூடும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமாகுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய கோவிட் – 19 நிலைமையை கருத்தில் கொண்டு இலங்கையில் முகக்கவசம் அணிவது தொடர்பான பரிந்துரைகள் திருத்தப்பட்டுள்ளதாகவும் சட்டத்தால் நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்