போராட்டகாரர்களுக்கு விடுக்கப்படுள்ள எச்சரிக்கை!

அரசாங்க கட்டிடங்களை கைப்பற்ற முயன்றால் போராட்டக்காரர்களின் கை, கால்கள் உடைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை முன்னாள் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விடுத்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்தார். எனினும் போராட்டக்காரர்கள் அன்பு வழி போராட்டமொன்றை முன்னெடுப்பதாயின் அதற்கு எந்தத் தடையும் இல்லை என் கூறினார்.

அத்துடன் தாம் விரும்பியவாறு அமைதி வழியில் போராட்டங்களை எவருக்கும் முன்னெடுக்க முடியும். அதற்கு எந்தத் தடையும் இல்லை. அதனை விடுத்து சண்டித்தனம் செய்ய யாருக்கும் இடமளிக்க முடியாது.

அதேசமயம் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை என்பவற்றை கைப்பற்ற முயன்றால் அவர்களின் கை, கால்களை உடைப்பதைத் தவிர வேறு வழியிருக்காது என்றும் சனத் நிஷாந்த இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.