அழகை கெடுக்கும் வகையில் சரும பிரச்சனைகளான முகப்பரு, வறட்சியான சருமம், கரும்புள்ளிகள், பொலிவிழந்த முகம், சரும சுருக்கம் மற்றும் முடி கொட்டுதல், வழுக்கை விழுதல், நக சொத்தை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண நவீன சிகிச்சை முறைகளை தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வது நல்லது.
* முகச்சுருக்கம்: முதலில் கண்கள் மற்றும் வாய்ப்பகுதியை சுற்றி தான் சுருக்கங்கள் விரைவில் வர ஆரம்பிக்கும். இதனை தவிர்க்க தோல் மருத்துவரின் ஆலோசனைபடி தினமும் இரவில் முகத்தில் ரெட்டினால் எனும் கிரீமை மென்மையாக மசாஜ் செய்து வர வேண்டும்.
* நீர்ச்சத்து: சரும செல்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க நீர் சத்து மிகவும் இன்றியமையாதது. சரும செல்கள் புத்துணர்ச்சியுடன் இருந்தால் தான் முகம் பொலிவோடு இருக்கும். அதற்கு தினமும் போதுமான அளவில் தண்ணீர் குடிப்பதோடு சருமத்தின் வெளிப்புறம் வறட்சி அடையாமல் இருக்க மாய்ஸ்ரைசர் லோசன் போன்றவற்றை தினமும் பயன்படுத்த வேண்டும்.
* சன் ஸ்கிரீன்: தினமும் வெளியே செல்லும் முன் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமம் கருமை அடைவதை தடுக்கப்படுவதோடு, தோல் வயதாகும் செயல்முறையை மெதுவாக்கும்.
* கண் விளிம்பு: கண் விளிம்புகளுக்கு நல்ல பாதுகாப்பை வழங்க வேண்டும். அதற்கு வெளியே வெயிலில் செல்லும்போது சன் கிளாஸ் அணிந்து செல்வதோடு, கண்களை கடுமையாக தேய்ப்பதை தவிர்க்க வேண்டும். கண்களை அதிகமாக தேய்த்தால் கருவளையங்கள் மற்றும் சுருக்கங்கள் வர வாய்ப்புகள் அதிகம்.
* உணவை கவனியுங்கள்: சருமம் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமானால் ஸ்டார்ச் உணவுகள், எண்ணெய் பசை அதிகமுள்ள உணவுகளை தவிர்த்துவிட்டு Omega-3 Fattily Acid மற்றும் புரோட்டின் நிறைந்த உணவுகளை அன்றாடம் உட்கொள்ள வேண்டும்.
*நகங்கள் நகத்தை பற்களால் கடிக்க கூடாது வீட்டு வேலையை முடித்ததும் கைகளை கழுவி சிறிது நேரம் கழித்து கிரீம் தடவுங்கள். இதனால் நகங்கள் வறண்டு உடைவதை தடுக்கலாம். இரும்பு சத்து குறைவாக இருப்பதால் நகங்கள் எளிதில் உடையும். பட்டை, பட்டையாக பிரியும். எனவே இரும்பு சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். எனவே சரும பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை பயன்படுத்துவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.