மீன் மற்றும் மரக்கறிகளின் விலையில் சற்று குறைவு!

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் மரக்கறி மற்றும் மீன்களின் விலைகளில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மரக்கறிகளின் விலைகள் கிட்டத்தட்ட சுமார் 50 வீதத்தால் குறைந்துள்ளதாக மனிங் பொது வர்த்தக நிலையத்தின் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மீன்களின் விலையும் குறைவு

விவசாயிகளுக்கு எரிபொருள் கிடைப்பதால், கடைக்கு வரும் காய்கறிகளின் கையிருப்பு அதிகரித்ததே இதற்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, பேலியகொட மீன் சந்தையிலும் மீன்களின் விலை சடுதியாக குறைந்துள்ளதாக வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் குறைவடைந்துள்ளதாகவும், எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக கிராமங்களுக்கு அவற்றை அனுப்பி வைக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.