நாட்டில் கொரோனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

திருகோணமலையில் கோவிட் தொற்றாளர்களின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதினால் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருகோணமலை- அபயபுர பகுதியில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதால் சமூக இடைவெளிகளை பேணுமாறு திருவண்ணாமலை பிராந்திய வைத்திய பொறுப்பதிகாரி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் , தொடர்ச்சியாக முகக்கவசங்களை அணியுமாறும், பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் கோவிட் தொற்று

அபயபுர பகுதியில் 25 வயது உடைய தாயாருக்கும் ஒரு மாத கைக்குழந்தைக்கும் தொடர்ச்சியான காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில் தனியார் மருத்துவமனையில் அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றி வந்த பொது சுகாதார பரிசோதருக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனை மூலம் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் தற்போது கோவிட் தொற்றாளர்களின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.