பாடசாலை மாணவர்களுக்கான மதிய நேர உணவை மீண்டும் வழங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தரம் ஒன்று மற்றும் இரண்டுக்கான ஆரம்பக் கல்வியை இழந்து மூன்றாம் ஆண்டுக்கு சென்றுள்ள பாடசாலை மாணவர்களின் தகைமை குறித்து பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாளை முதல் 5ஆம் திகதி வரையான 5 நாட்களில் 3 நாட்களுக்கு மாத்திரம் பாடசாலை கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.