இலங்கை சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்கவில் வைத்து தம்பதியினர் ஒருவரை பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்றிரவு (30-07-2022) இடம்பெற்றுள்ளது.
கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவில் ஒருவரைக் கொலை செய்துவிட்டு துபாய்க்கு தப்பிச் செல்ல முயற்சித்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவில் ஆண் ஒருவரைக் கொலை செய்தார்கள் எனக் கூறப்படும் தம்பதியினர் துபாய்க்கு தப்பிச் செல்ல தயாராகி வருவதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு கல்கிஸ்ஸ தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் அறிவித்துள்ளார்
இதற்கமைய, கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் இந்த தம்பதிக்கு எதிராக தற்காலிக விமான தடை விதித்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.