பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு தெரியாது பேணப்பட்டு வந்த ரகசியம் வெளிவரும் தருணம்! உண்மையை அறியும் பாரதி

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா கண்ணம்மா பெற்றெடுத்த இரட்டை குழந்தைகளில் ஒருவர் என்ற உண்மை பாரதிக்கு தெரியவந்துள்ள அதிர்ச்சி ப்ரொமோ வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவின் சதியால் பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எப்பொழுது ஒன்று சேர்வார்கள் என்ற எண்ணம் ரசிகர்களிடையே அதிகமாக இருந்து வருகின்றது.

குறித்த சீரியலில் கடந்த வாரம் நடைபெற்ற மகா சங்கமம் இந்த வாரமும் தொடர்கின்றது. ராஜா ராணி சரவணன் – சந்தியா திருமண நாளன்று ஹேமா, லட்சுமிக்கு பிறந்த நாள் வருவதால், இரண்டு நிகழ்ச்சியினை ஒரே இடத்தில் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டு, அதன்படி வெண்பா முதற்கொண்டு, மற்ற உறவினர்களுக்கும் கூறியுள்ளனர்.

பாரதி ஹேமாவின் தாய் என்று யாரை அறிமுகப்படுத்தப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், பாரதி முதலில் காதலித்த பெண்ணின் புகைப்படத்தை வரைந்துள்ளார்.

பாரதிக்கு தெரிந்த உண்மை
இந்நிலையில் தற்போது வெளியான ப்ரொமோ காட்சியில், கண்ணம்மா எனக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்று தான் ஹேமா என்று அனைவர் முன்பும் கூறியுள்ளார்.

இதற்கு பாரதி அவரது அம்மாவிடம் கேட்க, சௌந்தர்யாவும் பாரதியிடம் ஹேமா கண்ணம்மாவின் குழந்தை தான் என்ற உண்மையை உடைத்துள்ளார்.

பாரதிக்கு உண்மை தெரிந்த நிலையில், அடுத்த என்ன நடக்கப்போகின்றது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள ஏக்கத்துடன் இருக்கின்றனர்.