நீரிழிவு நோயாளர்களுக்கு பலாப்பழம் ஏற்றதா?

பலாப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதில் புரதச்சத்துக்களும், மாவுச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகம் காணப்படுகின்றன.

அதே சமயம் பலாப்பழத்தை அளவுக்கு அதிகமாக உடகொண்டால் சில பக்கவிளைவுகள் ஏற்படும்.

பலாபழத்தின் பக்கவிளைவுகள்
பலாப்பழத்தை அளவுக்கு அதிகமாக உடகொண்டால் வயிறு மந்தமாகி வயிற்று வலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும்.

பலாப்பழ விதைகள் சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும் மலச்சிக்கல், கள்ளு குடிப்பவர்களுக்கு உண்டாவது போன்ற புளியேப்பம், கல் போல் வயிறு கட்டிப்போவது, வயிற்றுவலி போன்றவற்றை உண்டாக்கும்.

பலா பிஞ்சினை அதிக அளவில் உண்பதால் செரியாமை வயிற்றுவலி போன்றவை ஏற்படும்.

பலாப்பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டு சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டாலே அதன் நற்பலன்களை பெற முடியும்.

பலா பிஞ்சினை அதிகமாய் உணபதால் செரியாமை, வயிற்று வலி போன்றவை ஏற்படுவதுடன் சொறி, சிரங்கு, கரப்பான், இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.

நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா?
பழுத்த மற்றும் பழுக்காத பலாப்பழங்கள் இரண்டும் முக்கிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்களைக் கொண்டுள்ளன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு பல வழிகளில் உதவும்.

இருப்பினும் நீரிழிவு நோயாளிகள் பலாப்பழத்தை அளவோடு உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பச்சை பலாப்பழம் குளுக்கோஸ் குறைக்கும் ஆற்றல் வாய்ந்த விளைவைக் கொண்டுள்ளது. அதிக அளவில் உட்கொண்டால், அது சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம், குறிப்பாக சில நீரிழிவு எதிர்ப்பு மருந்துகளுடன் உட்கொண்டால் மற்றும் இரத்தச் சர்க்கரை குறைவை ஏற்படுத்தலாம்.

பலாப்பழம் பழுத்தவுடன், பழத்தில் உள்ள சர்க்கரை அளவுகள் மற்றும் மாவுச்சத்து அதிகரிக்கும். இது அதிக அளவு உட்கொண்டால் நீரிழிவ சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

பலாப்பழம் மிதமான கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது – அதிக அளவில் உட்கொண்டால், அது சர்க்கரை அளவைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகரிக்கலாம்