“டாக்டர்”, “டான்” படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வரும் ‘பிரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரியா போஷாப்கா கதாநாயகியாகவும், சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.
இந்த படத்தை தொடர்ந்து ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். மாவீரன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது.
“மாவீரன்” திரைப்படத்தில் நடிக்கக்கூடிய நடிகர்களை வரிசையாக படக்குழு அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா மற்றும் மிஷ்கின் ஆகியோர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
“மாவீரன்” திரைப்படத்தில் நடிக்கக்கூடிய நடிகர்களை வரிசையாக படக்குழு அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா மற்றும் மிஷ்கின் ஆகியோர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.