எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடல்
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவது தொடர்பில் இருவரும் கலந்துரையாடவுள்ளதாக தெரியவருகிறது.
இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தோழமைக் கட்சிகளான தமிழ் முற்போக்கு முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியியின் தோழமைக் கட்சிகளில் சில கட்சிகள் சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாட தனித்தனியாகவும் ஜனாதிபதியை சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கிக் கொண்டுள்ளன.