சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தற்போதைய சந்தர்ப்பதில் பிரயோசனமான ஒன்றல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது கூறியுள்ளார்.
சர்வகட்சி அரசாங்கம் என்பது நாட்டில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும் என நினைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
போராட்டகாரர்களின் பிரதான கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்
ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது. இதனால், அது சம்பந்தமாக சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டும் எனவும் பொன்சேகா, ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அண்மையில் இணையத்தள ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்டிருந்த சரத் பொன்சேகா, போராட்டகாரர்கள் உயிரை தியாகம் செய்தேனும் போராட்டத்தின் நோக்கத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.