கௌதம் கார்த்திக்கு விரைவில் டும் டும்

கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமானார் மஞ்சிமா.

கடந்த 2019ம் ஆண்டு கௌதம் கார்த்திக்குடன் இணைந்து தேவராட்டம் படத்தில் நடித்த போது, கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக தெரிகிறது.

இதனை இருவருமே மறைமுகமாக ஒப்புக்கொண்டனர், இந்த ஆண்டு மஞ்சிமா மோகனின் பிறந்தநாளில், தனது வாழ்த்துகள் மூலம் அவருடனான காதலை பற்றி கூறினார் கௌதம்.

இந்த நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்களாம், சமீபத்தில் ரசிகர்களுடன் பேசிய போது கௌதம் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அதாவது, திருமணம் பற்றி கேள்விக்கு, ’விரைவில் என நம்புகிறேன்’ என்று பதிலளித்துள்ளார்.

இருவரது பெற்றோர்களும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்ட நிலையில், நல்ல செய்தி வரும் என குதூகலமாகியுள்ளனர் இருவரது ரசிகர்களும்.