சம்பளத்தை உயர்த்திய விஜய்

தளபதி விஜய் அடுத்தப் படத்திற்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி வாரிசு படத்திற்கு 130 கோடி ரூபாய் சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் கடைசியாக நடித்து பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

இந்த படத்திற்கு 80 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகின்றது.

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கிவரும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.

இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பிறகும் தளபதி விஜயின் சம்பளம் மளமளவென அதிகரித்து விட்டது.

இவருக்கு அடுத்தப்படியாக உலகநாயகன் 130 கோடி சம்பளம் வாங்க உள்ளார். விக்ரம் வெற்றிக்கு பிறகு உலகநாயகனின் சம்பளமும் அதிகரித்து விட்டது.