இருவேறு பிரதேசங்களில் இருவர் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று(06) தெரிவித்துள்ளது.
கொழும்பு, பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவகமுவ, ரணால பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இரகசிய தகவல்
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைமையகத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அவரது வீட்டை சோதனை செய்தபோது வெளிநாட்டு துப்பாக்கி, தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது நடவடிக்கை
இதேவேளை, கொழும்பு அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டுவாவ பிரதேசத்தில் உள்நாட்டு துப்பாக்கி ஒன்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தும்மோதர பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.