வவுனியா – புளியங்குளத்தில் கொள்கலனில் எரிபொருள் விநியோகம் செய்தமை குறித்து எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா – புளியங்குளம் பகுதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று எரிபொருள் விநியோகம் இடம்பெற்றபோதே அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய எரிபொருள் அட்டை நடைமுறை சீராக பின்பற்றப்படாது எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளதுடன், சில வாகனங்களுக்கு அரசாங்கத்தால் அறிவுறுத்தல் வழங்கப்பட்ட அளவுகளை விட அதிகமாக எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எரிபொருள் அட்டை முறை
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை கட்டுப்படுத்தும் முகமாக அரசாங்கத்தினால் நாடு முழுவதும் எரிபொருள் அட்டை முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எரிசக்தி அமைச்சால் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு கடந்த முதலாம் திகதி முதல் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.