பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராமின் விலை மிக அதிகளவில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை காலமும் இல்லாத அளவு பச்சை மிளகாயின் விலை உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகரிக்கும் விலை..
இதன்படி, ஒரு கிலோ பச்சை மிளகாய் 1200 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த காலத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 800 ரூபாவிற்கு விற்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை 40 தொடக்கம் 50 சதவீதத்தால் அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மலைநாட்டு மரக்கறிகளின் விலை 60 – 70 வீதத்தால் அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.