கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி வரையில் நிலவிய கடுமையான வெப்ப நிலை காரணமாக இவ்வாறு மரணங்கள் சம்பவித்துள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் 70 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதினை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
எவ்வாறு எனினும் 40 வயது உடைய இரண்டு பேரும் கடுமையான வெப்பம் காரணமாக உயிரிழந்திருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிரேச சுகாதார வளையத்திற்கு உட்பட்ட பகுதியில் எட்டு மரணங்கள் பதிவாகியுள்ளன இந்த மரணங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அதன் பின்னரே இந்த தகவல்கள் முழுமையாக உறுதிப்படுத்தப்படும் எனவும் பிரேத பரிசோதனையாளர்கள்.
கடந்த கோடை காலத்திலும் வெப்பம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாகாணத்தின் சில பகுதிகளில் 40 பாகை செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெப்பநிலையை அதிகரித்து காணப்படும் சந்தர்ப்பங்களில் சிரேஸ்ட பிரஜைகள், நாட்பட்ட நோயுடையவர்கள், வீடற்றவர்கள், கர்ப்பிணிகள் போன்ற தரப்பினர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இவர் என்னும் கடந்த ஆண்டு மாகாணத்தில் நிலவிய கடுமையான வெப்பநிலை இந்த ஆண்டு நிலவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டில் வெப்பநிலையை காரணமாக பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் சுமார் 619 மரணங்கள் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது