இந்தியாவின் பெங்களூரு நகரில் நீதிமன்றத்தில் வைத்து தனது மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்துக் கோரிக்கையின் பின்னர் மீண்டும் இணைந்து வாழ சம்மதித்திருந்த நிலையில் இத்தாக்தல் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிவகுமாரும் அவரின் மனைவி சித்ராவும் 7 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து விவாகரத்து செய்வதற்கு இவர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இவர்களை உளவள ஆலோசனை சேவை நிகழ்வொன்றில் பங்குபற்றுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதன்படி, பெங்களூரு ஹோலேநரசிபுர குடும்ப நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு மணித்தியால ஆலோசனை நிகழ்வில் இத்தம்பதியர் பங்குபற்றினர்.
இதன்போது இவர்கள் தமக்கிடையிலான முரண்பாடுகளை களைந்துவிட்டு இணைந்து வாழ்வற்கு அவர்கள் சம்மதித்துள்ளனர்.
எனினும் இந்நிகழ்வின் பின் வெளியே வந்த சித்ரா, கழிவறை நோக்கி நடந்தபோது பின்தொடர்ந்து சென்ற சிவகுமார் அப்பெண்ணை கழுத்தை கத்தியால் வெட்டியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அங்கிருந்து சிவகுமார் தப்பியோட முயன்றபோதிலும் அருகிலிருந்தவர்கள் அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் அதிகளவு இரத்தம் வெளியேறியிருந்ததால் சிகிச்சை பலனின்றி சித்ரா உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.