நாளை முதல் 30 நாட்களுக்கு சூரியனால் அதிஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்

சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார்.

ஆகஸ்ட் 17 ஆம் தேதி சிம்ம ராசிக்கு செல்கிறார். சிம்ம ராசிக்கு சூரியன் நுழையும் போது ஆவணி மாதம் பிறக்கிறது.

சிம்மம் செல்லும் சூரியனால் பல ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கவுள்ளன. இப்போது ஆகஸ்ட் 17 ஆம் தேதி சிம்மம் செல்லும் சூரியனால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
நாளை முதல் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களைக் கொண்டுவரும்.

இக்காலத்தில் மாணவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். கூடுதலாக நிதி ரீதியாக கையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். பணியிடத்தில், உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடனான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். நிதி வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நல்ல ஆற்றலுடன் இருப்பீர்கள். சமூகத்தில் அந்தஸ்து மேம்படும்.

வாழ்க்கையில் பல நேர்மறையான விஷயங்கள் நடக்கும். சட்ட விஷங்களில் வெற்றி கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம்
இக்காலத்தில் நிதி நிலை வலுவாக இருக்கும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். இக்காலத்தில் வணிகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும். அரசு வேலைக்கு தயாராகுபவர்களுக்கு நற்செய்திகள் கிடைக்கும்.

மீனம்
சூரியனின் உதவியால் நோயெதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும். கூடுதலாக, மாணவர்களுக்கு இது நல்ல காலம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இக்காலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு நல்ல காலமாக இருக்கும்.