நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மாத்திரம் 17 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து, இந்தியா, கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே அதிகளவில் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக தினமும் ஆயிரத்து 600 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதேவேளை கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடிகளை அடுத்து சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.