சிறுவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஒமிக்ரோன் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் கடுமையான காய்ச்சலுக்குள்ளாகும் அபாயம் அதிகரித்துள்ளது.

சீமாட்டி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் கோசல கருணாரத்ன இந்த விடயத்தனைத் தெரிவித்துள்ளார்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இரண்டாவது நாளிலும் தொடர்ந்து காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக வைத்தியரிடம் செல்லுமாறும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ரெபிட் அன்டிஜன் பரிசோதனை

இவ்வாறான நிலையில் உள்ள சிறுவர்களுக்கு ரெபிட் அன்டிஜன் பரிசோதனை அல்லது டெங்கு அன்டிஜன் பரிசோதனை நடத்துவது முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் காய்ச்சல் ஏற்பட்டால், வலி நிவாரணிகளை கொடுக்காமல், பராசிட்டமோல் மாத்திரம் கொடுப்பது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சிறுவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் சிறப்பு மருத்துவர் கோசல கருணாரத்ன கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.