பிரபல பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார்!

தமிழறிஞரும் இலக்கியச் பேச்சாளருமான நெல்லை கண்ணன் (77) உடல்நலகுறைவால் காலமானார்.

சிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் ‘தமிழ்க்கடல்’ என அழைக்கப்பட்டார்.

1970 ஆம் ஆண்டு முதல் பல்வேறு மேடைகளில் நெல்லை கண்ணனின் தமிழ் ஒலித்து வந்தது. மேலும் சமீபத்தில் அரசின் இளங்கோவடிகள் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றார் நெல்லை கண்ணன்.