இரவு உணவை தவிர்ப்பதால் ஏற்ப்படும் பிரச்ச்சினைகள்

உடல் எடையைக் குறைப்பதற்கு பலரும் வெவ்வேறு வழிமுறைகளை தேர்வு செய்கிறார்கள். சிலர் இரவு உணவை தவிர்க்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். இரவில் குறைந்த அளவிலாவது உணவு உட்கொள்ள வேண்டும். எதுவும் சாப்பிடாமல் இருப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று நம்புகிறார்கள். இரவு உணவைத் தவிர்ப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

சில பக்க விளைவுகளையும் அனுபவிக்கக்கூடும். இரவு உணவை தவிர்க்க முயற்சிப்பவர்களில் சிலர் உணவுக்கு மாற்றாக துரித உணவுகளை தேர்வு செய்கிறார்கள். அது உடலில் சர்க்கரை அளவையும், கவலையையும் அதிகரிக்கச் செய்யும். அதாவது கார்டிசால் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். மன அழுத்த ஹார்மோன் என அழைக்கப்படும் இது உடலில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்துவிடும்.

உயர் ரத்த அழுத்தம், பலவீனம், கவலை, மனச்சோர்வு போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும். இரவு உணவை தவிர்ப்பது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். இது மன ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு காலை உணவை தவிர்க்கவும் வழிவகுக்கும். இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் என்விரான்மென்டல் ரிசர்ச் அண்ட் பப்ளிக் ஹெல்த் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், காலை உணவை தவிர்ப்பவர்கள் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்ற அறிகுறிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தூக்கத்திற்கு இடையூறாக இருக்கும் மன அழுத்த ஹார்மோன்களின் செயல்பாடுகளை அதிகரிக்க செய்துவிடும். இரவு உணவைத் தவிர்ப்பது செரிமான செயல்முறையையும் பாதிக்கும். உடலில் இருந்து எரிக்கப்படும் கலோரிகளின் அளவும் குறைந்துவிடும். மேலும் இரவு உணவை தவிர்ப்பது பசியை தூண்டுவிடும். நள்ளிரவில் பசி உணர்வுடன் அவதிப்பட நேரிடும். அப்படி பசியை புறக்கணிப்பது உடல் நலனை பாதிப்படைய செய்துவிடும். இரவு உணவை அதிகம் சாப்பிடுவதும் நல்லதல்ல. மாலை வேளையில் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடலாம். அது இரவில் சாப்பிடும் உணவின் அளவை குறைத்துக்கொள்ள வழி வகுக்கும்.