தொப்பையை குறைக்க உதவும் இரண்டு எளிய பொருட்கள்

பொதுவாக நமது சமையலறையில் உள்ள பொருட்கள் அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தாக காணப்படும். அதில் தேன் மற்றும் பூண்டு ஆகிய இரண்டுமே சக்தி வாய்ந்தவை. இவை இரண்டும் ஒன்று சேரும் போது, அதன் பலன்கள் இரட்டிப்பாகும்.

குறிப்பாக தற்போது பெரும்பாலானோர் அவதிப்படும் உடல் பருமன் பிரச்சனைக்கு இந்த பூண்டு தேன் கலவை பெரிதும் உதவி புரியும். அந்தவகையில் இதனை எப்படி எடுத்து கொள்ளலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

பூண்டு மற்றும் தேனை எவ்வாறு சாப்பிடுவது?
ஒரு பூண்டு பல்லை எடுத்து அதன் தோலை உரித்துவிட்டு, நசுக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு சிறிய கப்பில் ஒரு டீபூன் தேனை எடுத்துக் கொண்டு, அதில் நசுக்கிய பூண்டு சேர்த்து கலந்து, 15-20 நிமிடம் ஊற வைக்கவும்.

இந்த தேன் பூண்டை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

வேண்டுமானால், நீங்கள் கொஞ்சம் அதிகமாக தயாரித்தால், அதை 3 நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்து சாப்பிடலாம்.

உடல் எடையைக் குறைக்க உதவுமா?
இரண்டு பொருட்களுமே தனித்துவமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. அதில் இவை உடல் எடையைக் குறைக்க நேரடியாக உதவாமல் இருக்கலாம் அல்லது கொழுப்புக்களை எரிக்கும் செயல்முறையை விரைவுபடுத்தலாம். ஆனால் இவை நிச்சயமாக உடல் எடை இழப்பு திட்டத்தை ஆதரிக்கும்.

பூண்டு ஒரு ஊட்டச்சத்துக்களின் கிடங்கு. இது வைட்டமின் பி6, வைட்டமின் சி, நார்ச்சத்து, மாங்கனீசு, கால்சியம் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. இந்த சத்துக்கள் அனைத்துமே எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தேன், உடலில் ஆற்றலுக்கான குளுக்கோஸை உற்பத்தி செய்ய உதவி, உடலில் எரிபொருளாக செயல்படுகிறது. குளுக்கோஸ் மூளையின் சர்க்கரை அளவை அதிகமாக வைத்திருக்கிறது மற்றும் கொழுப்பை எரிக்கும் ஹார்மோன்களை வெளியிட கட்டாயப்படுத்துகிறது.